வணிகம்

இனிமேல் கூகுள் பே மூலம் யாரும் ஏமாற்ற முடியாது… வந்துவிட்டது சவுண்ட்பாக்ஸ்!

Published

on

கூகுள் பே மூலம் பணம் பரிவர்த்தனை செய்பவர்கள் சிலர் சின்ன கடைக்காரர்களிடம் ஏமாற்றி வருவதாகவும் பணம் அனுப்பாமலேயே பணம் அனுப்பி விட்டதாக கூறி வருவதாகவும் புகார்கள் எழுந்து வருகின்றன.

இந்த நிலையில் ஏற்கனவே பேடிஎம் மற்றும் போன் பே ஆகிய நிறுவனங்கள் சவுண்ட் பாக்ஸ் அறிமுகம் செய்துள்ள நிலையில் தற்போது கூகுள் பே சவுண்ட் பாக்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக இந்தியா, டிஜிட்டல் இந்தியாவாக மாறி வருகிறது என்பதையும் டிஜிட்டல் மூலம் பண பரிவர்த்தனைகள் செய்யும் தொகை ஆண்டு அதிகரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். சின்ன சின்ன பெட்டி கடைகள் மற்றும் தள்ளுவண்டிகளில் வியாபாரம் செய்பவர்கள் கூட கூகுள் பே, போன் பே மற்றும் போன் பி ஆகியவை மூலம் பண பரிவர்த்தனை செய்யும் க்யூஆர் கோடு கொண்ட அட்டை வைத்திருக்கிறார்கள் என்பதும் பத்து ரூபாய் பொருள் வாங்கினால் கூட அதன் மூலம் நாம் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் ஒரு சிலர் பண பரிவர்த்தனை செய்யும்போது பணம் அனுப்பி விட்டதாக கடைக்காரர்களை ஏமாற்றி விடுவதுண்டு, அல்லது பணம் சென்றுவிட்டதாக தவறாக கருதியதும் உண்டு. கடைக்காரர்கள் தங்களுடைய வங்கி கணக்கை சரிபார்க்கும் போது தான் தாங்கள் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்வார்கள்.

இதனை தவிர்ப்பதற்காக ஏற்கனவே பேடிஎம் மற்றும் போன் பி ஆகிய செயலிகள் சவுண்ட் பாக்ஸ் அறிமுகம் செய்துள்ளன. இதன் மூலம் பண பரிவர்த்தனை செய்யும் போது பரிவர்த்தனை முடிந்தவுடன் ஒரு ஒலி கேட்கும் என்பதும் அதேபோல் அந்த பாக்ஸுக்கு பின்னால் இருக்கும் ஒரு டிஸ்ப்ளேவில் எவ்வளவு தொகை பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதை காண்பிக்கும்.

எனவே இந்த சவுண்ட் பாக்ஸ் வந்த பிறகு கடைக்காரரை எந்த ஒரு வாடிக்கையாளரும் பணம் அனுப்பி விட்டதாக ஏமாற்ற முடியாது. இந்த நிலையில் பேடிஎம் மற்றும் போன் பி ஆகிய நிறுவனங்களை அடுத்து தற்போது கூகுள் பேயும் சவுண்ட் பாக்ஸ் அறிமுகம் செய்யது உள்ளது.

அமேசான் நிறுவனத்தில் இந்த சவுண்ட் பாக்சை குறைந்த விலையில் பெற்றுக் கொள்ளலாம் என்றும் இந்த சவுண்ட் பாக்சை வைத்துக் கொண்டால் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமின்றி வணிகர்களுக்கும் பாதுகாப்பானது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தற்போது கூகுள் பே க்யூஆர் கோடு வைத்திருக்கும் வணிகர்கள் இந்த சவுண்ட் பாக்சை வாங்கி பயன்படுத்தலாம் என அறிவுறுத்தப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version