வணிகம்

கூகுள் பே-ல் பணம் அனுப்பக் கட்டணம்? விளக்கம் அளித்த கூகுள்

Published

on

கூகுள் பே செயலியில் பணம் பரிமாற்றம் செய்தால் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூகுள் தெரிவித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகின.

இந்த செய்திக்கு விளக்கம் அளித்துள்ள கூகுள், இந்தியாவில் கூகுள் பே செயலி மூலம் பணம் பரிமாற்றம் செய்ய கட்டணம் விதித்துள்ளது உன்மைதான், ஆனால் அது இந்தியாவில் கிடையாது என்று தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் கூகுள் பே போன்ற செயலியை அறிமுகம் செய்கிறோம். அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்படும் இந்த செயலிக்குத்தான் கட்டணம் செலுத்த வேண்டி வரும். எனவே இந்தியாவில் கூகுள் பே செயலியைப் பயன்படுத்தக் கட்டணம் ஏதும் விதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்படும் கூகுள் பே செயலியில், அந்த செயலியைப் பயன்படுத்தும் பயனர்கள் இடையில் மட்டுமே பணம் பரிமாற்றம் செய்யப்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கூகுள் பே செயலியை 67 லட்சம் நபர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் கிடைத்த இந்த வெற்றியை அடுத்து அமெரிக்காவில் கூகுள் பே அறிமுகமாகிறது.

இந்தியாவில் கூகுள் பே போன்று, பேடிஎம், போன்பே, அமேசான் பே போன்ற செயலிகள் பயன்பாட்டில் உள்ளன. விரைவில் வாட்ஸ்அப் செயலியிலும் பணம் பரிமாற்றம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version