இந்தியா

இண்டர்நெட் இல்லாமல் கூகுப் பே-யில் பணம் அனுப்புவது எப்படி?

Published

on

கூகுள் பே உள்ளிட்ட ஆன்லைன் பண பரிவர்த்தனைக்கு கண்டிப்பாக இண்டர்நெட் இருக்க வேண்டும் என்ற நிலை இருக்கும் போது, இண்டர்நெட் இல்லாமலும் கூகுள் பே செயலி உள்ளிட்ட பணப் பரிவர்த்தனை செயலிகள் மூலம் பணத்தை அனுப்பலாம் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது,

இது எப்படி சாத்தியம் என்பதை தற்போது பார்ப்போம். முதலாவதாக உங்களது மொபைலில் நீங்கள் யுபிஐ கணக்கை உருவாக்கி பீம் செயலியை செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். அதற்கு முன்னர் உங்கள் வங்கி கணக்குடன் தொலைபேசி எண் இணைக்கப்பட்டு இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்,

இதனை அடுத்து உங்கள் மொபைலில் இருந்து *99# என்ற எண்ணுக்குடயல் செய்ய வேண்டும். அதன் பின்னர் பணம் அனுப்ப வேண்டுமா? பெற வேண்டுமா? என்பது குறித்த ஆப்சனை தேர்வு செய்து, பணம் அனுப்ப வேண்டும் என்றால், அனுப்புவதற்கான மெனுவை தேர்வு செய்ய வேண்டும்,

உங்களது யுபிஐ ஐடி, வங்கி கணக்கு மற்றும் ஐஎஃப்எஸ்சி (IFSC) எண் ஆகியவற்றை பதிவு செய்த பின்னர் உங்களுக்கு பணம் அனுப்ப அனுமதி அளிக்கப்படும். அதன்பின்னர் யாருக்கு பணம் அனுப்ப வேண்டுமோ அவர்களது யுபிஐ ஐடி, எவ்வளவு பணம் ஆகிய விவரத்தை நீங்கள் பதிவு செய்ய வேண்டும். அதோடு பணம் பெறுபவர்களில் ஐஎஃப்எஸ்சி குறியீட்டு எண்ணையும் பதிவு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது,

அதன்பின் பணத்தை எந்த செயலி மூலம் பணம் அனுப்ப போகிறீர்கள் என்பதை தேர்வு செய்ய வேண்டும். உதாரணத்திற்கு கூகுள் பே செயலியை நீங்கள் தேர்வு செய்தால், அதன் பின்னர் கூகுள் பே என்ற ஆப்சனை கிளிக் செய்தால் உங்களது பணம் நீங்கள் அனுப்ப வேண்டிய நபருக்கு சென்று விடும் என்பதும் இதற்கு வெறும் 50 காசுகள் மட்டுமே செலவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இணைய வசதி இல்லாதவர்கள் இந்த முறையை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்,

கூகுள் பே செயலியில் இருந்து மட்டுமின்றி போன்பே, பேடிஎம், ஏர்டெல் பேமெண்ட் பேங்க், அமேசான் பே உள்ளிட்டவற்றிலும் இதேபோல் இண்டர்நெட் இன்றி பணம் அனுப்பலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version