இந்தியா

கூகுள் பே செயலியில் பிக்சட் டெபாசிட்: வங்கி கணக்கு இல்லாமல் சேமிப்பு!

Published

on

இதுவரை பிக்சட் டெபாசிட் செய்ய வேண்டும் என்றால் வங்கியில் கணக்கு தொடங்கி அதன் பின்னர் பிக்சட் டெபாசிட் செய்ய வேண்டிய நிலை இருந்த நிலையில் தற்போது மிக எளிதாக கூகுள் பே செயலியில் பிக்சட் டெபாசிட் செய்யலாம் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

உலகம் முழுவதும் பணம் பரிமாற்றம் செய்வதற்கான செயலியாக கூகுள் பே செயல்பட்டு வருகிறது என்பதும் இதன் மூலம் ஏராளமானோர் பணப்பரிமாற்றம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கூகுள் பே தற்போது பிக்சட் டெபாசிட் சேவையை அறிமுகம் செய்துள்ளது.

இதற்காக ஈக்விட்டி ஸ்மால் பைனான்ஸ் பேங்க் என்ற வங்கியுடன் கூகுள் பே கூட்டணி வைத்துள்ளது. எனவே இனி கூகுள் பே பிக்சட் டெபாசிட் செய்யலாம் என்றும் வங்கியில் பிக்சட் செய்யப்படும் பிக்சட் டெபாசிட்டை விட கூகுள் பே செயலியில் செய்யப்படடும் பிக்சட் டெபாசிட்டிற்கு அதிக வட்டி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் பே மூலம் பிக்சட் டெபாசிட் செய்ய கூகுள் பே செயலியில் உள்ள ‘Business and Bills’ என்ற ஆப்சனில் ‘Equitas Bank’ என்பதை தேர்வு செய்து, அதில் உள்ள பிக்ஸட் டெபாசிட் ஆப்சனில் நீங்கள் டெபாசிட் செய்ய விரும்பும் தொகை, ஆண்டுகள் ஆகியவற்றை பூர்த்தி செய்ய வேண்டும்.

அதன் பின்னர் ஆன்லைன் மூலம் பணத்தை செலுத்திவிட்டால், மெச்சூரிட்டி தினத்தன்று உங்கள் வங்கிக் கணக்குக்கு நேரடியாக பணம் வந்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாடிக்கையாளர்கள் தங்களது டெபாசிட் தொடர்பான விவரங்களை கூகுள் பே செயலியில் அவ்வப்போது தெரிந்து கொள்ளலாம்.

seithichurul

Trending

Exit mobile version