தொழில்நுட்பம்

இனி மெசேஜஸ் ஆப் வேலை செய்யாதாம்!

Published

on

கூகுள் நிறுவனத்தின் மெசேஜஸ் ஆப்பானது ஒரு சில ஆண்டராய்டு போன்களில் வேலை செய்யாது என்று தகவல்கள் வந்துள்ளன.

ஸ்மார்ட்போன்களில் தற்போது மெசேஜ் ஆப்பானது ஓடிபி, வங்கி, மிஸ்டுகால் போன்றவற்றிற்கு மட்டும் தான் பயன்படுகிறது. அந்த அளவிற்கு வாட்ஸ்அப், சிக்னல் போன்ற மற்ற தகவல் தொடர்பு செயலிகள் புழக்கத்திற்கு வந்துவிட்டன. சில ஸ்மார்ட்போன்களின் கூகுள் நிறுவனத்தின் மெசேஜஸ் என்ற செயலி இருக்கும்.

இந்நிலையில், வரும் ஏப்ரல் மாதம் முதல் கூகுள் நிறுவனத்தின் இந்த மெசேஜஸ் என்ற செயலி இயங்காது என்று தகவல்கள் வந்துள்ளன. அதற்கு மாற்றாக, இன்னும் அதிக பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய RCS மெசேஜ் செயலியைக் கொண்டு வருகிறது.

ஆண்ட்ராய்டு என்பது கூகுளின் தயாரிப்பாக இருந்தாலும், ஒரு சில ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் கூகுளின் குறிப்பிட்ட ஒரு சேவை உரிமம் பெறாமல் உள்ளது. இதன் காரணமாக, அத்தகைய ஸ்மார்ட்போன்களில் கூகுளின் மெசேஜஸ் ஆப் செயல்படாது என்றும். இந்த மாற்றங்கள் மார்ச் 31 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் தகவல்கள் வந்துள்ளன.

Trending

Exit mobile version