உலகம்

இனி ஒத்தையடி பாதைகளையும் கூகுள் மேப்பில் பார்க்கலாம்: புதிய வசதி அறிமுகம்!

Published

on

அண்ணாச்சி கடை முதல் அம்பானியின் வீடு வரை அசால்டாக சென்று வர முடிகிறது என்றால் அதற்கு கூகுள் மேப்பின் தயவே காரணம் என்பது மிகையாகாது. கூகுள்மேப் பல்வேறு சேவைகளை தனது செயலின் மூலம் வழங்கினாலும் அவ்வப்போது புதிய வசதிகளையும் அறிமுகப்படுத்திக் கொண்டே உள்ளது.

மக்களுக்கு இன்னும் சிறப்பான சேவையை வழங்குவதற்காக அவ்வப்போது தொடர்ந்து கூகுள் நிறுவனம் அப்டேட் செய்தும் வருகிறது. நாம் செல்லும் சாலையில் விபத்துகள் ஏற்பட்டால் அதனை மேப் மூலமாக தெரிந்து கொள்ளும் வசதிகளையும் சமீபத்தில் அறிமுகப்படுத்தி இருந்தது. மேலும் கொரோனா காலத்தில் கூகுள் மேப் மூலமாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை அறிந்து கொள்ளும் வசதிகளையும் வழங்கியது

இந்நிலையில் தற்போது புதிய அப்டேட் ஒன்றை கூகுள்மேப் வழங்க இருக்கிறது. கூகுள் மேப்பில் ட்ராயிங் என்ற புதிய ஆப்ஷன் வரவுள்ளது. இது மைக்ரோசாப்ட் பெயிண்டில் உள்ள லைன் டூல் போலவே இருக்கும். இதில் மிஸ்ஸிங் ரோடு என்றும், ADD ரோடு என்றும் ஆப்ஷன் இருக்கும். இதன் மூலம் குக்கிராமங்களுக்கு ஒருவர் செல்ல வேண்டிய இருந்தால், அந்த பகுதி கூகுள் மேப்பில் ஒருவேளை இல்லை என்றால் ஆப்ஷனில் சென்று ட்ராயிங் துணைகொண்டு அந்த சாலையை நாம் வரைந்து ADD செய்து கொள்ளலாம். பின்னர் அந்த சாலைக்கு பெயர் வைத்து சப்மிட் செய்ய வேண்டும். அடுத்த ஏழு நாட்களில் கூகுள் நிறுவனம் அதனை ரிவ்யூ செய்து புதிய சாலையை அனைவருக்கும் காண்பிக்கும்

இந்த புது ஆப்ஷனை முதலில் 80 நாடுகளில் கூகுள் நிறுவனம் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் இதுவரை சென்றிராத குக்கிராமங்களுக்கு கூட இனிமேல் மிகச்சுலபமாக சென்றடையலாம். இருப்பினும் சிலர் விளையாட்டுத்தனமாக கூகுள் மேப்பில் இந்த ஆப்ஷனை தவறாக பயன்படுத்தி சாலையே இல்லாத இடங்களில் சாலை இருப்பதாக வரைந்து இல்லாத சாலைக்கு பெயர் வைத்து விட்டால் நிலைமை என்னவாக போகிறது என்பது கேள்விக்குறியே

Trending

Exit mobile version