வணிகம்

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட பேடிஎம் என்ன காரணம்!

Published

on

டிஜிட்டல் வாலெட் நிறுவனமான பேடிஎம் வெள்ளிக்கிழமை திடீரென கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது பயனர்களை அதிர்ச்சியடையச் செய்தது.

அண்மையில் கூகுள் நிறுவனம் தங்கள் பிளே ஸ்டோரில் உள்ள செயலிகளுக்கு புதிய கட்டுப்பாடு விதிகளை விதித்தது. அதன் படி பெட்டிங் போன்ற ஆனலைன் கேம்கள் செயலிகளை இனி பிளே ஸ்டோரில் தொடர்ந்து வழங்க முடியாது என்று கூறப்பட்டு இருந்தது.

பேடிஎம் செயலி வாலெட் சேவை தானே நமது பிரதான வணிகம் என்று கேம் விதிகளை பொருட்படுத்தாமல் இருந்துவந்தது. பேடிஎம் செயலியின் கேம் சேவை கீழ் சென்று பெட்டிங் போன்ற கேம்களை விளையாட முடியும்.

இதை அறிந்த கூகுள் நிறுவனம் பிளே ஸ்டோரில் இருந்து பேடிஎம் செயலியை அதிரடியாக நீக்கியுள்ளது. இது பேடிஎம் நிறுவனத்தின் பயனர்களிடையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பேடிஎம் செயலி கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து தூக்கப்பட்டு இருந்தாலும், அதன் பிற வணீகம் மற்றும் மியூச்சுவல் ஃபண்டு முதலீடு செயலிகள் தொடர்ந்து கிடைக்கும். பேடிஎம் செயலியை தொடர்ந்து பயன்படுத்தவும் முடியும். வாலெட்டில் உள்ள பணம் பாதுகப்பாகவும் இருக்கும்.

மறுபக்கம் பேடிஎம் நிறுவனத்தில் அதிகப்படியான சீன முதலீடுகள் இருப்பதும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version