உலகம்

டிரோன் டெலிவரி சேவையில் அமேசானை முந்திய கூகுள்!

Published

on

இணையதள தேடு பொறி நிறுவனமான கூகுள் முதல் முறையாக தங்களது டிரோன் டெலிவரி சேவையை ஆஸ்திரேலியாவிலிருந்து தொடங்கியுள்ளது.

உலகின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் டிரோன் டெலிவரி சேவையை அறிமுகம் செய்யும் பணிகளில் உள்ள நிலையில், கூகுள் முந்தியுள்ளது.

ஆஸ்திரேலியா விமான போக்குவரத்து ஒழுங்கு முறை ஆணையத்திடம் முறையான ஒப்புதல்களைப் பெற்று கேன்பெர்ராவில் செவ்வாய்க்கிழமை முதல் டிரோன் டெலிவரியை கூகுள் செய்துள்ளது.

2014-ம் ஆண்டு முதலே ஆஸ்திரேலியாவில் டிரோன் டெலிவரி சேவையை அறிமுகம் செய்வதற்கான சோதனை முயற்சியில் கூகுள் ஈடுபட்டு வந்தது.

இந்த சோதனை முயற்சியில் 3,000 நபர்களுக்கு மருந்துகள் மற்றும் சாக்லேட்டுகளை கடந்த 18 மாதங்களில் கூகுள் டெலிவரி செய்தது. ஆனால் அதிகாரப்பூர்வமாக முழு அனுமதியுடன் செவ்வாய்க்கிழமை முதல் டிரோன் டெலிவரி சேவை ஆஸ்திரேலியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version