தொழில்நுட்பம்

கூகுள் நிறுவனத்தின் மடிக்கும் ஸ்மார்ட்போன்: இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!

Published

on

உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான கூகுள் நிறுவனம் ஏற்கனவே பிக்ஸெல் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது மடிக்கும் வகையான போல்டிங் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ஜம்போ ஜெட் என்ற பெயரில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மொபைல் ஆண்ட்ராய்டு 12.1 இயங்குதளத்தை கொண்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் நிறுவனத்தின் இசட்பிளிப் ஃபோல்டர் மாடல் போன்றே வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த ஜம்போ ஜெட் மொபைல் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மொபைல் மாடல் இறுதிகட்ட பரிசோதனை நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த ஜம்போ ஜெட் மாடல் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூகுள் நிறுவன அதிகாரிகள் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

இந்த மொபைல் போனை திறந்த நிலையிலும், மூடிய நிலையிலும், பாதி திறந்த நிலையிலும், பின்பக்கமாக மடங்கிய நிலையிலும் என நான்கு வகைகளிலும் பயனாளர்கள் பயன்படுத்த முடியும் என்றும் ஒவ்வொரு டிஸ்பிளேவுக்கு ஏற்றமாதிரி திரை வடிவம் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிகிறது.

மேலும் ஸ்மார்ட்போனை மடக்குவதற்கு மிகவும் நவீன தொழில்நுட்ப வசதி பயன்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த ஜம்போ ஜெட் மொபைல்போனின் புகைப்படங்கள் இணையதளத்தில் கசிந்த வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே சாம்சங் உள்ளிட்ட ஒரு சில நிறுவனங்கள் மடிக்கும் மொபைலை சந்தைப்படுத்தி உள்ளது என்பதும் தற்போது கூகுள் நிறுவனத்தின் மடக்கும் மொபைல் நிச்சயம் வாடிக்கையாளர்களை கவரும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

Trending

Exit mobile version