இந்தியா

இறந்தவுடன் உங்கள் டேட்டா என்ன ஆகும்? கூகுள் கொடுக்கும் முக்கிய ஆப்சன்!

Published

on

உலகில் கூகுள் பயன்படுத்தாதவர்களே இல்லை என்ற அளவுக்கு கூகுளை கிட்டத்தட்ட உலகிலுள்ள அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பாக தங்களுடைய முக்கிய புகைப்படங்கள், டேட்டாக்கள், வங்கி சம்பந்தப்பட்ட தகவல்களை கூகுள் டிரைவில் பதிவு செய்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் ஒருவேளை கூகுளைப் பயன்படுத்துபவர் இறந்துவிட்டால் அவருடைய டேட்டாவை என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து கூகுள் தற்போது ஆப்ஷனை கொடுத்துள்ளது.

இதன்படி கூகுள் பயன்படுத்தும் ஒருவர் அதனை 18 மாதங்கள் பயன்படுத்தாமல் இருந்தால் அடுத்ததாக அவருடைய டேட்டா யாருக்கு செல்ல வேண்டும் என்பதை முன்கூட்டியே நாம் பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம். 18 மாதங்கள் என்பதை நாம் கூடுதலாகவும் குறைவாகவும் நிர்ணயம் செய்துகொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் அக்கவுண்ட்டை நீங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு மேல் செயல்படாமல் வைத்து இருந்தால் அந்த அக்கவுண்டன்ட் யாருக்கு நீங்கள் செல்ல வேண்டும் என்று தகவல் அதில் பதிவு செய்து இருக்கிறார்களோ, அவர்களுக்கு நோட்டிபிகேஷன் செய்யும். அவர்கள் உங்கள் அக்கவுண்டில் உள்ள டேட்டாவை டவுன்லோட் செய்துகொள்ள வாய்ப்பு வழங்கப்படும்.

ஒருவேளை நீங்கள் இறந்த பிறகு உங்களுடைய டேட்டாக்களை யாரும் பார்க்க வேண்டாம் என்று விரும்பினால் அதற்கான ஆப்சனும் உள்ளது. அந்த ஆப்சனை தேர்வு செய்தால் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் காலத்திற்குப் பின்னர் உங்களுடைய டேட்டா முழுவதும் டெலிட் செய்யப்படும். வேறு யாரும் உங்கள் டேட்டாவை பார்க்க முடியாது.

ஆனால் அதே நேரத்தில் நீங்கள் ஒரு வாரிசுதாரரை தேர்வு செய்திருந்தால் அந்த நபர் உங்கள் அக்கௌன்ட் செயல்படாமல் போன காலத்திற்கு பின்னர் மூன்று மாதங்களுக்குப் பிறகும் அவர் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. கூகுளின் இந்த புதிய வசதியை பெற நினைப்பவர்கள் myaccount.google.com/inactive என்ற தளத்தில் சென்று தேர்வு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version