உலகம்

குடும்பத்துடன் இன்பச்சுற்றுலா சென்றபோது வந்த வேலைநீக்க அறிவிப்பு.. கூகுள் பெண் ஊழியர் அதிர்ச்சி..!

Published

on

கூகுள் நிறுவனத்தில் பணி செய்து கொண்டிருந்த பெண் பொறியாளர் ஒருவர் குடும்பத்துடன் இன்பச் சுற்றுலா சென்ற போது அவருக்கு வேலை நீக்கம் செய்யப்பட்டதாக தகவல் அனுப்பப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலை, பணவீக்கம், வட்டி குறைவு உள்பட பல்வேறு காரணங்களால் பெரிய நிறுவனங்கள் வேலைநீக்க நடவடிக்கையை எடுத்து வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக கூகுள் நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்னால் 12,000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்வதாக அறிவித்ததை யாராலும் நம்ப முடியவில்லை.

உலகிலேயே மிகச்சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக கருதப்பட்ட கூகுள் நிறுவனமே 12 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பப்பட்ட அனுப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் கூகுள் நிறுவனத்தில் இருந்து வேலை நீக்கம் செய்யப்பட்டவர்கள் தங்களுடைய சோக அனுபவத்தை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.

layoff7

அந்த வகையில் பெயர் குறிப்பிட விரும்பாத பெண் ஊழியர் ஒருவர் தான் தனது குடும்பத்துடன் இன்பச் சுற்றுலா சென்று இருந்த போது திடீரென தனக்கு வேலை நீக்கம் செய்யப்பட்டதாக மெசேஜ் வந்ததாகவும் அதை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறியுள்ளார்.

நான் கூகுள் நிறுவனத்தில் இன்னும் அதிக காலம் வேலை பார்க்க விரும்பவில்லை என்றும் சில ஆண்டுகளில் வெளியேறவிடலாம் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன் என்றும், ஆனால் அதற்குள் எதிர்பாராமல் வேலை நீக்க அறிவிப்பு வந்தது தன்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்றும் நான் குடும்பத்துடன் சந்தோஷமாக இன்ப சுற்றுலாவில் இருந்தபோது அந்த மகிழ்ச்சியை கெடுக்கும் வகையில் இந்த அறிவிப்பு இருந்தது என்றும் அவர் தனது சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதிகாலை ஐந்து மணிக்கு தனக்கு வேலைநீக்க மெசேஜ் அனுப்பப்பட்டதாகவும் அதை பார்த்ததும் தனது இன்பச் சுற்றுலாவே சோகமாகிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். நான் கூகுள் நிறுவனத்திற்காக கடினமான உழைத்தேன், ஆனாலும் நான் நிறுவனத்தில் இருந்து வேலை நீக்கம் செய்யப்பட்டது எனக்கு வருத்தத்தை அளித்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த பதிவை அடுத்து அவருக்கு சமூக வலைதள பயனாளர்கள் ஆறுதல் அளித்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version