உலகம்

புற்றுநோயால் இறந்த தாயார்.. விடுமுறை எடுத்த கூகுள் ஊழியர் வேலைநீக்கம்!

Published

on

கூகுள் நிறுவனத்தில் பணி புரியும் ஒருவர் தனது தாயார் இறந்ததால் இறுதிச்சடங்கு செய்ய விடுமுறை எடுத்து அதன் பின் மீண்டும் அலுவலகத்திற்கு திரும்பியபோது அவர் வேலை நீக்கம் செய்யப்பட்டதாக அறிவித்ததால் பெரும் அதிர்ச்சி அடைந்தார்.

சமீபத்தில் கூகுள் நிறுவனம் 12000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்தது என்பதும் இதன் காரணமாக வேலை நீக்கம் செய்யப்பட்டவர்களின் சோக கதைகள் அவ்வப்போது இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் கூகுள் நிறுவனத்தின் சான் பிரான்சிஸ்கோ அலுவலகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இளைஞர் ஒருவர் வேலைக்கு சேர்ந்தார். அவர் ஒரு வருடமாக வேலை செய்து கொண்டிருந்த நிலையில் திடீரென அவரது தாயார் கடந்து டிசம்பர் மாதம் புற்று நோயால் காலமானார்.

புற்றுநோயால் அவர் பல மாதங்கள் போராடிய நிலையில் சிகிச்சையின் பலன் இன்றி உயிரிழந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் தாயார் இறந்துவிட்டதை அடுத்து விடுமுறை எடுத்த அந்த கூகுள் ஊழியர் இறுதிச் சடங்கு முடிந்த பின்னர் நான்கு நாட்கள் கழித்து அலுவலகம் சென்றபோது அவர் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். அந்த அறிவிப்பு எனக்கு முகத்தில் அறைந்தது போல் இருந்ததாகவும் இதைவிட வேறு சோதனையான காலம் எனக்கு இதுவரை இருந்ததில்லை என்றும் அவரை தெரிவித்துள்ளார்.

இருப்பினும் எனது தாயாரின் இறுதி சடங்கு நடத்துவதற்காக விடுமுறை அளித்த கூகுள் நிறுவனத்திற்கு நன்றி என்றும் தாயாரின் மறைவால் சோகத்தில் இருக்கும் நான் அதில் இருந்து மீள கால அவகாசம் கொடுத்த நிறுவனத்திற்கு நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கூகுள் இல்லாவிட்டால் ஏதாவது ஒரு நிறுவனத்தில் எனக்கு வேலை கிடைக்கும் என்றும் ஆனால் அம்மா என்பது ஒரே ஒருவர் மட்டும்தான், அவர் இறக்கிறார் என்றால் அவரது இறுதி சடங்குகளை செய்யவும் அந்த சோகத்தில் ஆழ்ந்திருக்கவும் ஒரே ஒருமுறை மட்டுமே சந்தர்ப்பம் கிடைக்கும் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து மார்ச் மாதம் தான் அடுத்த வேலையை தேடத் தொடங்க இருப்பதாகவும் எனக்கு பொருத்தமான வேலை என்று நினைக்கும் நபர்கள் என்னை தொடர்பு கொள்ளுங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ஏராளமானவர் அவருக்கு உதவி செய்ய வந்துள்ளனர். அவரது ரெஸ்யூமுக்கு பொருத்தமான வேலைகள் குறித்த தகவல்களை அவருக்கு அனுப்பி வருகின்றனர். இதனால் அவர் விரைவில் புதிய வேலையில் சேருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே தாயை இழந்து பெரும் சோகத்தில் இருக்கும் அந்த இளைஞர், வேலை போய்விட்டது என்ற சோகத்தையும் சேர்த்து சுமந்து கொண்டிருப்பதை அடுத்து நெட்டிசன்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருவதோடு அவருக்கு தகுந்த வேலையை தேடி தருவதாகவும் உறுதி கொடுத்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version