சினிமா செய்திகள்

சிவாஜி கணேசனுக்கு கூகுள் டூடுல் செய்த மரியாதை!

Published

on

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கூகுள் டூடுல் அவரது புகைப்படத்தை கூகுள் ஹோம் பக்கத்தில் பகிர்ந்து அவரை கவுரவித்துள்ளதை அடுத்து சிவாஜி கணேசன் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது என்பதும், இன்று சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் முக்கிய பிரமுகர்களின் பிறந்தநாளின் போது அவர்களது புகைப்படத்தை கூகுள் டூடுல் பதிவு செய்து மரியாதை செலுத்தும் வழக்கம் இருந்து வருகிறது. அந்த வகையில் இன்று சிவாஜி கணேசன் பிறந்த நாளை அடுத்து கூகுள் டூடுல் அவரது புகைப்படத்தை பதிவு செய்து மரியாதை செலுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் நடிகர் ஒருவருக்கு கூகுளில் கிடைத்துள்ள இந்த மரியாதை தமிழ் சினிமாவுக்கே மிகவும் பெருமைக்குரியது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் திரையுலக பிரபலங்கள் இதனை தங்களது சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டு கூகுளுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version