தொழில்நுட்பம்

8 வருடங்களுக்குப் பிறகு கூகுள் க்ரோம் லோகோவில் புதிய மாற்றம்!

Published

on

கூகுள் நிறுவனம் 8 வருடங்களுக்குப் பிறகு கூகுள் க்ரோம் உலாவியின் லோகோவை மாற்றியுள்ளது.

கூகுள் க்ரோம் உலவி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகம் செய்த பிறகு 3 ஆண்டுகள் ஆன போது லோகோ புதுப்பிக்கப்பட்டது.

பின்னர் 2014-ம் ஆண்டு கூகுள் க்ரோம் லோகோ மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. இப்போது 8 ஆண்டுகளுக்குப் பிறகு 2022-ம் ஆண்டு கூகுள் க்ரோம் லோகோவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

லொளொகில் 3 வண்ணங்களுக்கும் இருந்த நிழல் நீக்கப்பட்டுள்ளது. வண்ணங்களைப் பிரகாசமாக்கியுள்ளனர். மேலும் வண்ணத்தின் விகிதாச்சாரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என கூகுள் க்ரோம் உலாவியின் வடிவமைப்பாளர் எல்வின் ஹூ டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

லோகோ மாறினால் என்ன? புதிய அம்சங்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என்பது பயனர்களின் எதிர்பார்ப்பு.

seithichurul

Trending

Exit mobile version