இந்தியா

கூகுள், மைக்ரோசாப்ட் சி.இ.ஓக்களுக்கு பத்மபூஷன் விருது அறிவிப்பு!

Published

on

ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷண் விருதுகள் சாதனை செய்த நபர்களுக்கு அளிக்கப்படும் என்பது தெரிந்ததே.

அந்தவகையில் சவுகார்ஜானகி உள்பட 50 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி மைக்ரோசாப்ட் சிஇஓ சத்ய நாதெல்லா மற்றும் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை ஆகிய இருவருக்கும் பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது.

அதேபோல் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, பாடகர் சோனு நிகம் ஆகியோருக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது, மேலும் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் பத்மபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் அவர்களுக்கும் பத்மபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி கண்டுபிடித்த சீரம் நிறுவன மேலாண்மை இயக்குனர் பூனாவாலாவுக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version