வணிகம்

கொரோனாவால் கவிழ்ந்த தமிழகத்துக்கு ஓர் நற்செய்தி!

Published

on

இந்தியாவில், அண்மையில் ஏற்பட்ட பொருளாதார சரிவு சிறு மாநிலங்களில் குறைந்தளவில் தான் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. பொருளாதார சரிவிலிருந்து பெரிய வளர்ந்த மாநிலங்கள் மீண்டு வருகின்றன. அதிலும் தமிழகம் முன்னணியில் உள்ளது.

தமிழகம், மகாராஷ்டிரா, உத்திர பிரதேசம், கர்நாடகா, குஜராத் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட 6 மாநிலங்கள் மட்டும் இந்தியாவின் 50 சதவீத பொருளாதார மீட்சியில் உள்ளதாகத் தரவுகள் கூறுகின்றன.

செப்டம்பர் மாதம் 69 சதவீத மக்கள் இயல்பு வாழ்க்கையிற்கு இந்த 6 மாநிலங்களிலிருந்து திரும்பியுள்ளனர் என்று கூகுள் தரவு கூறுகிறது. கொரோனா ஊரடங்கு மார்ச் மாதம் தொடங்கிய பிறகு இதுவே அதிகமாகும். பிற மாநிலங்களில் 78 சதவீத மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளனர்.

இந்த தரவுகளானது கொரோனா பாதிப்புகள், பணியிடத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், மின்சாரம் பயன்பாடு, வாகனப் பதிவுகள், ஜிஎஸ்டி வசூல் போன்றவற்றை வைத்து முடிவு செய்யப்பட்டுள்ளது.

டாப் 12 மாநிலங்கள் மட்டும் தலா 4 சதவீதம் என இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சிக்கு உதவியுள்ளன. சிறிய மாநிலங்களின் ஜிடிபி பங்களிப்பு 1 முதல் 2 சதவீதமாக உள்ளன.

இந்தியாவின் ஜிடிபியில் செப்டம்பர் மாதம் 8.6 சதவீத பங்களிப்பைத் தமிழகம் அளித்துள்ளது. தினம் 1.1 சதவீதம் வரை ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் உள்ளது. சென்ற வருடத்துடன் ஒப்பிடும் போது ஜிஎஸ்டி வசூல் 14.9 சதவீதம் அதிகரித்துள்ளது. மின்சார பயன்பாடு 2.3 சதவீதம் சரிந்துள்ளது. புதிய வாகனங்கள் பதிவு செய்வது 17.2 சதவீதம் அதிகரித்துள்ளது. ஜிஎஸ்டி வசூலில் ராஜ்ஸ்தான் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

ஜிடிபியில் மாநிலங்களின் பங்களிப்பு (% share in India’s GDP) தினசரி வைரஸ் வளர்ச்சி விகிதம் (CDGR) இயக்கம் அதிகரிப்பு ஜிஎஸ்டி வசூல் (Change, YoY) மின்சார பயன்பாடு (Change, YoY) புதிய வாகனங்கள் பதிவு (Change, YoY)
மகாராஷ்டிரா (14.1) 1.9 -1 -0.2 1.4 2.5
தமிழ்நாடு (8.6) 1.1 2.3 14.9 -2.3 17.2
உத்தரபிரதேசம் (8.5) 1.9 -1.1 0 18.9 -27.6
கர்நாடகா (7.9) 1.9 -3 -4.7 -12.3 -16.2
குஜராத் (7.8) 1.2 -1.5 6.1 6 -45
மேற்கு வங்கம் (5.9) 1.6 4 4.2 2.9 9.4
ராஜஸ்தான் (4.9) 1.7 -3.7 17.5 3.3 -18.4
ஆந்திரா (4.6) 1.6 -2.1 7.9 0.8 NA
தெலுங்கானா (4.4) 1.4 -1 -2 -2.7 NA
மத்தியப் பிரதேசம் (4.2) 2.4 -3.8 4.3 23.2 NA
கேரளா (4.1) 3.2 -3.5 11.4 -4.2 -9
டெல்லி (4) 1.6 1.4 -7.1 -2.6 -27.9
நடுத்தர அளவிலான பொருளாதாரங்கள் (3) 2 -5.2 12.6 4.8 -17.8
சிறிய அளவிலான பொருளாதாரங்கள் (1.6) 2.6 -9.7 12.5 5.2 -6
இந்தியா 1.8 -2.1 4.6 4.6 -11

Trending

Exit mobile version