உலகம்

400 பேரை வேலைநீக்கம் செய்யும் முக்கிய வங்கி.. கண்ணீரில் ஊழியர்கள்

Published

on

பொருளாதார மந்தநிலை மற்றும் பணவீக்கம் காரணமாக உலகின் பல்வேறு நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் முக்கிய வங்கி ஒன்றில் தனது ஊழியர்களில் 400 பேரை வீட்டுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உலகின் முன்னணி பன்னாட்டு முதலீட்டு நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி என்ற நிறுவனம் 1500 ஊழியர்களை சமீபத்தில் வேலையை விட்டு நீக்கிய நிலையில் தற்போது முக்கிய வங்கி மற்றும் முதலீட்டு நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸ் குரூப் இன் என்ற நிறுவனம் 400 பேரை வேலையிலிருந்து நீக்க திட்டமிட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிறுவனம் தற்போது பொருளாதார நிலையில் போராடி வருவதாகவும், நிறுவனத்தை சீரமைக்கவும் லாபத்தை நோக்கி செல்லவும் இந்த வேலை நீக்க நடவடிக்கையை எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கோல்ட்மேன் நிறுவனம் தனிநபர் கடன்களை வழங்குவதையும் நிறுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு தனிநபர் கடனை அறிமுகப்படுத்திய இந்நிறுவனம் தற்போது அந்த கடனை நிறுத்த திட்டமிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதல் கட்டமாக பணி நீக்க நடவடிக்கை எடுத்து நிறுவனத்தின் செலவை குறைக்க திட்டமிட்டுள்ளதாக இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டேவிட் சாலமன் அவர்கள் தெரிவித்துள்ளார். குறிப்பாக குறைவான செயல் திறன் கொண்ட ஊழியர்கள் கணக்கெடுக்கப்பட்டு வருவதாகவும் வருடாந்த கூட்டத்திற்கு பின்னர் இந்த வேலை நீக்க நடவடிக்கை குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இதனால் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

உலக அளவில் பல வங்கிகள் வேலை நீக்க நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதும் இதனால் வங்கிகள், ஐடி துறையில் பணிபுரியும் பல ஊழியர்கள் வேலை பாதுகாப்பின்றி இருப்பதாக கூறப்படுகிறது.

Trending

Exit mobile version