சினிமா செய்திகள்

கோல்டன் ரீல் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 2.0!

Published

on

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி – அக்‌ஷய் குமார் நடிப்பில் வெளியாகி மாபெரும் வசூல் சாதனை படைத்த 2.0 திரைப்படம் சர்வதேச விருதான கோல்டன் ரீல் விருதின் இறுதி பரிந்துரைப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

சிறந்த சவுண்ட் எடிட்டிட்டர்களுக்கு வழங்கப்படும் உச்சபட்ச விருது இந்த கோல்டன் ரீல். வரும் பிப்ரவரி 18ம் தேதி அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருக்கும் வெஸ்டின் போனாவெஞ்சர் ஹோட்டலில் இந்த விருது விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

66வது கோல்டன் ரீல் விருது விழாவில் இந்தியாவின் சார்பாக அனுப்பப்பட்ட 2.0 திரைப்படம் தேர்வாகியுள்ளது பெருமைக்குரிய விஷயமாகும்.

சவுண்ட் எடிட்டிங்கிற்காக ஆஸ்கர் வென்ற ரசூல் பூக்குட்டி, மேலும் ஒரு சர்வதேச விருதினை 2.0 சவுண்ட் எடிட்டிங்கிற்காக தட்டிச் செல்வாரா என அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

2.0 திரைப்படத்தில், குருவிகளின் ஓசை, குருவி சாகும்போது நிகழும் ஓசை, செல்போன்கள் நகரும் ஓசை என 4டி ஆடியோவில் ஏ.ஆர். ரஹ்மானும், ரசூல் பூக்குட்டியும் மிரட்டியிருந்தனர்.

23 பிரிவுகளின் கீழ் சிறந்த சவுண்ட் எடிட்டர்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன. இதில், சிறந்த வெளிநாட்டு படத்திற்கான சவுண்ட் எடிட்டர்ஸ் பிரிவில் 2.0 பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

மேலும், 2.0 திரைப்படத்துடன் இந்த பிரிவில் கேபர்னம், கோல்ட் வார், தி கில்டி, நெவர் லுக் அவே, ரெட்பேட், தி ஹாப்பி பிரின்ஸ், விண்டர் பிரதர்ஸ் ஆகிய 7 படங்கள் போட்டியிடுகின்றன.

இந்த போட்டியில் 2.0 வென்று சர்வதேச விருதினை பெற வாழ்த்துக்கள்!

seithichurul

Trending

Exit mobile version