சினிமா செய்திகள்

இமான் அண்ணாச்சி வீட்டில் 41 சவரன் நகை கொள்ளை

Published

on

சன் டிவியில் சொல்லுங்கண்ணே சொல்லுங்க.. குட்டி சுட்டீஸ் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் இமான் அண்ணாச்சி, அவ்வப்போது வெள்ளித்திரையிலும் ஒருசில படங்களில் தோன்றி வருகிறார்.

சென்னை அரும்பாக்கத்தில் வசித்து வரும் இமான் அண்ணாச்சி குடும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளார். இதை அறிந்து கொண்ட திருட்டுக் கும்பல் அவரது வீட்டில் தங்களது கைவரிசையைக் காட்டியுள்ளனர். சுமார் 41.5 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து விட்டுச் சென்றுள்ளனர்.

சென்னை திரும்பிய இமான் அண்ணாச்சி, தனது வீட்டில் கொள்ளைப் போன சம்பவம் அறிந்து உறைந்து போனார். பின்னர், அரும்பாக்கம் காவல் நிலையத்தில் வீட்டில் திருடு போனது குறித்து புகார் அளித்துள்ளார்.

Trending

Exit mobile version