தமிழ்நாடு

இன்று ஒரே நாளில் ரூ.560 குறைந்த தங்கம் விலை!

Published

on

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏறி, இறங்கி வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை ரூபாய் 560 குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கத்தில் முதலீடு செய்தால் பாதுகாப்பானது என்று அனைத்து பொருளாதார வல்லுனர்களூம் கூறி வரும் நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பொதுமக்கள் தங்கத்தில் முதலீடு அதிகமாக செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.

அதுமட்டுமின்றி 2021-22 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் தங்கம் மீதான வரி குறைக்கப்பட்டதை அடுத்து தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்தது. இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 70 ரூபாய் குறைந்து, சவரன் ஒன்றுக்கு ரூ.560 குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் இன்றைய தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4180 என்பதும், ஒரு சவரனின் விலை ரூ.33,440 என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல் வெள்ளியின் விலை கிலோ ஒன்ருக்கு ரூ.2500 குறைந்துள்ளது என்பதும் சென்னையில் இன்றைய வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.70,700 என விற்பனையாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version