வணிகம்

தங்கம் விலை 2024-ம் ஆண்டு சவரனுக்கு ரூ.56000 வரை செல்லும்.. என்ன சொல்கிறார்கள் வல்லுநர்கள்?

Published

on

ஆபரணத் தங்கம் விலை 2024-ம் ஆண்டு சவரனுக்கு (8 கிராம்) 56000 ரூபாய் வரை செல்லும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளார்கள். தற்போது 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு 5910 ரூபாயாகவும் சவரன் (8 கிராம்) 47280 ரூபாயாகவும் உள்ளது.

24 காரட் சுத்த தங்கம் விலை கிராமுக்கு 6380 ரூபாயாகவும், சவரன் 51040 ரூபாயாகவும் உள்ளது.

Gold

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டு வரும் போர் போன்ற பதற்றமான சூழல் காரணமாக, கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தற்போதே சர்வதேசச் சந்தையில் தங்கம் விலை அவுன்ஸ் 2062.75 டாலராக உள்ள நிலையில், புத்தாண்டில் 2400 டாலர் வரை அதிகரிக்கும். எனவே சவரனுக்கு 56000 ரூபாய் வரை தங்கம் விலை அதிகரிக்கும் என காம் டிரெண்ட்ஸ் ஆராய்ச்சி இயக்குநர் ஞானசேகர் தியாகராஜன் பிடிஐ செய்தி நிறுவனத்திற்குத் தெரிவித்துள்ளார்.

2024-ம் ஆண்டு பொதுத் தேர்தல் வர உள்ள நிலையில், வெளிநாட்டு முதலீடுகள் குறையும். ரூபாய் மதிப்பு பாதிக்கக் கூடும். அதனாலும் தங்கம் விலை அதிகரிக்க அதிக வாய்ப்புள் உள்ளதாகவும் கூறுகின்றனர்.

விலை உயர்வு காரணமாக இந்தியா மற்றும் சீனாவில், சில்லறை நகைகளை வாங்குவது தலைகீழாக மாறக்கூடும் என கோடக் செக்யூரிட்டீஸ் துணைத் தலைவரும், கமாடிட்டி ரிசர்ச் பிரிவின் தலைவருமான ரவீந்திர ராவ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதம் குறைப்பு மற்றும் போர் பதற்றங்கள் போன்ற காரணங்களால் ரூபாய் மதிப்பு சரிவது, தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே 2024-ம் ஆண்டு சர்வதேசச் சந்தையில் தங்கம் வ்விலை 2,250 டாலர் முதல் 2300 டாலர் வரை அதிகரிக்கும். அப்படி ஆகும் போது இந்தியச் சந்தையில் தங்கம் விலை 50 ஆயிரம் முதல் 54 ஆயிரம் வரை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாக அகில இந்திய ஜெம் மற்றும் ஜூவல்லரி உள்நாட்டு கவுன்சில் தலைவர் சயாம் மெஹ்ரா கூறியுள்ளார்.

Tamilarasu

Trending

Exit mobile version