தமிழ்நாடு

ரூ.43 ஆயிரத்தில் இருந்து ரூ.33 ஆயிரம் என இறங்கிய தங்கம்: இன்னும் இறங்குமா?

Published

on

கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தபோது தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தவர்கள் அனைவரும் அந்த பணத்தை எடுத்து தங்கம் வாங்கியதால் பங்கு வர்த்தகம் சரிந்து தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்தது. ஒரே நேரத்தில் தங்கத்தின் தேவை அதிகரித்ததால் தங்கத்தின் விலை எகிறியது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தங்கத்தின் விலை சவரனுக்கு 43 ஆயிரம் வரை விற்பனை ஆன நிலையில் கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை படிப்படியாக இறங்கி தற்போது 33 ஆயிரத்துக்கும் கீழ் விற்பனையாகி வருகிறது. ஒரு சில மாதங்களில் சவரன் ஒன்றுக்கு பத்தாயிரம் இறங்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் தங்கம் விலை இறங்கியுள்ளதை பயன்படுத்தி சேமிக்கும் எண்ணம் உள்ளவர்கள் தங்கத்தை தற்போது வாங்க சரியான காலம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் தங்கத்தின் விலை இன்னும் இறங்கும் என்றும் 30 ஆயிரத்துக்கு கீழ் இறங்க வாய்ப்பு இருப்பதாகவும் தங்க நகை கடைக்காரர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

ஆனால் அதே நேரத்தில் தங்கம் மீண்டும் 50,000 வரை உயரும் என்றும், சேமிக்கவேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் இப்பொழுது முதல் தங்கத்தை படிப்படியாக வாங்கி வைத்துக்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. இன்னும் ஐந்து முதல் பத்து வருடங்களில் தங்கத்தின் விலை ஒரு கிராம் 10 ஆயிரம் வரை உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version