சினிமா செய்திகள்

தங்கம் வாங்க இது நல்ல நேரம்… சரிவில் ஆபரணத் தங்கம் விலை..!

Published

on

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை நீண்ட நாட்களுக்குப் பின்னர் சரிவைச் சந்தித்துள்ளதால் தங்கம் வாங்க இது நல்ல நேரம்.

சென்னையின் நிலவரப்படி தங்கத்தின் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து வலுவிழந்து வருவதால் தங்கத்தின் விலை சரிவைச் சந்தித்து வருகிறது. கடந்த ஐந்து நாட்களில் மட்டும் வரலாறு காணாத உச்சத்தில் இருந்த தங்கம் விலை பெரும் சரிவைக் கண்டுள்ளது.

கடந்த ஐந்து நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை 2 ஆயிரம் ரூபாய் வரையில் குறைந்துள்ளது. கடந்த ஐந்து மாதங்களில் 10 கிராம் தங்கத்தின் விலை சுமார் 10 ஆயிரம் ரூபாய் வரையில் சரிந்துள்ளது. இதனால், தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவோருக்கு இது மிகச் சரியான நேரம் என்றே கூறப்படுகிறது. கொரோனா பாதிப்பால் சரிவடையும் பொருளாதாரம் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருவதால் விரைவில் தங்கத்தின் விலை ஏறவும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இன்றைய விலை நிலவரத்தின் அடிப்படையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம்-க்கு 45 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 34,720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version