இந்தியா

ஏடிஎம் மூலம் தங்கம்: கிரெடிட், டெபிட் கார்டில் வாங்கலாம்!

Published

on

இனி ஏடிஎம் மூலமே தங்கம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்ட் மூலமே தங்கத்தை வாங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பொதுவாக தங்க நகை கடைகளில் தான் தங்கம் வாங்கி வருவோம் தங்க பிஸ்கட் போன்றவற்றை வங்கிகளிலும் வாங்கலாம் என்பது தெரிந்ததே. ஆனால் தற்போது ஏடிஎம் மிஷினில் தங்கம் வாங்கும் வசதி தொடங்கப்பட்டுள்ளது

கோல்ட் சிக்கா லிமிட்டெட் நிறுவனம் என்ற நிறுவனம் தங்க ஏடிஎம் மிஷினை ஐதராபாத்தில் வைத்துள்ளதாகவும், இதன் மூலம் தங்கம் வாங்கவும் செய்யலாம் விற்கவும் செய்யலாம் என்றும், நாம் கணக்கு வைத்துள்ள வங்கி ஏடிஎம் கார்டு அல்லது கிரெடிட் கார்டு மூலமாக இந்த மெஷினில் தங்கம் வாங்க முடியும் விற்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது

அதுமட்டுமின்றி இந்த நிறுவனமே பிரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு கார்டுகளை வழங்குகின்றன என்று அந்த கார்டுகள் மூலம் தங்கம் வாங்க, விற்க செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

இந்தியாவில் தங்கம் ஏடிஎம் வாங்க விற்க அறிமுகம் செய்யப்படுவது இதுவே முதல்முறை என்றும் இன்னும் ஒரு ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் 3000 தங்க ஏடிஎம்களை நிறுவ இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது

seithichurul

Trending

Exit mobile version