இந்தியா

தங்கம் விலை உயர்ந்து வரும் நிலையில் மீண்டும் சரியும் பங்குச்சந்தை!

Published

on

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக ஒரு பக்கம் தங்கத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் பங்கு சந்தையின் சென்செக்ஸ் வீழ்ச்சி அடைந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உக்ரைன் மற்றும் ரஷ்ய நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதாரம் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அனைத்து நாடுகளின் பங்குச் சந்தையும் மிகவும் சரிந்துள்ளது என்பதும் இந்தியாவில் கூட மும்பை பங்குச்சந்தை பெருமளவு சரிந்தது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் இன்றும் பங்குச்சந்தை கிட்டத்தட்ட 500 புள்ளிகள் சரிந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சற்று முன்வரை மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 450 புள்ளிகள் சரிந்து 55 ஆயிரத்து 400 என்ற அளவில் விற்பனையாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 116 புள்ளிகள் சரிவு 16540 என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது .

ஒரு பக்கம் பங்கு சந்தை வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் தங்கம் விலை அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் ஒரு கிராம் தங்கம் 75 ரூபாய் உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது .

பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள் அந்த பணத்தை எடுத்து தங்கத்தை வாங்கி குவித்து வருவதால் பங்கு சந்தை வீழ்ச்சி அடைந்து வருவதாகவும் தங்கம் விலை ஏறி வருவதாகவும் பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

 

seithichurul

Trending

Exit mobile version