தமிழ்நாடு

8 கிராம் தங்கம், ரூ.50,000 ரொக்கம்: திருமண உதவி திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்

Published

on

திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் ரூபாய் 50 ஆயிரம் ரொக்கம் வழங்கும் திருமண உதவி திட்டத்தை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோர்கள் வழங்கிவந்த தாலிக்கு தங்கம் மற்றும் ரொக்கம் திட்டம் கடந்த சில ஆண்டுகளாக வழக்கத்தில் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

பட்டதாரி பெண்கள் திருமணத்திற்கு 8 கிராம் தங்கம் மற்றும் 50 ஆயிரம் ரொக்கம் என்றும் உயர் கல்வி படித்த பெண்களுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் 25 ஆயிரம் ரொக்கம் என்றும் வழங்கப்படுகிறது. திருமணத்திற்கு 15 நாட்களுக்கு முன்னர் மணப்பெண்ணின் பெற்றோர் தகுந்த சான்றிதழ்களுடன் சமர்பிக்க வேண்டும் என்றும், திருமணம் முடிந்து அதனை ரிஜிஸ்தர் அலுவலகத்தில் பதிவு செய்தவுடன் தங்கம் மற்றும் ரொக்கம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் இந்த திட்டத்தில் பயன் பெறுவதற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. மணமகள் வீட்டில் யாரேனும் அரசு பணியில் இருந்தாலோ, வேறு ஏதேனும் திருமண நிதி உதவி திட்டம் பெற்று இருந்தாலோ, மணப்பெண்ணுக்கு 18 வயதுக்கு குறைவாக இருந்தாலோ, நான்கு சக்கர வாகனம் வைத்திருந்தாலோ, மாடி வீட்டில் குடியிருந்தாலோ இந்த உதவி பெற முடியாது என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தாலிக்கு தங்கம் மற்றும் ரொக்கம் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று தொடங்கி வைத்தார். அதேபோல் பல்வேறு மாவட்டங்களில் அமைச்சர்கள் இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version