தமிழ்நாடு

மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை: இன்றைய விலை என்ன?

Published

on

தங்கம் விலை கடந்த சில நாட்களாக சரிந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

தங்கத்தில் முதலீடு செய்வது எப்போதும் பாதுகாப்பு என்றும் எந்த விலையில் தங்கம் வாங்கினாலும் அது நமக்கு லாபத்தை கொடுக்கும் என்றும் பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை வீழ்ச்சி அடைந்ததால் தங்கம் வாங்க சரியான நேரம் இதுதான் என்று பலர் அறிவுறுத்தினர்.

இந்த நிலையில் தற்போது தங்கத்தின் தேவை அதிகரித்து வருவதால் மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. ஆபரண தங்கத்தின் விலை சென்னையில் இன்று ஒரு கிராம் 24 உயர்ந்து ரூபாய் 4355 விற்பனையாகி வருகிறது. ஒரு பவுன் 192 உயர்ந்து 34 ஆயிரத்து 840 என விற்பனையாகி வருகிறது

இதேபோல் 24 காரட் தங்கத்தின் விலை 8 கிராம் 37 ஆயிரத்து 912 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளியின் விலை தற்போது 80 காசுகள் உயர்ந்து 73.30 ரூபாய்க்கும், ஒரு கிலோ 73 ஆயிரத்து 300 என்ற விலையில் விற்பனையாகி வருவதாகவும் நகைக்கடை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்

seithichurul

Trending

Exit mobile version