தமிழ்நாடு

மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை: இன்று ஒரே நாளில் ரூ.128 உயர்வு!

Published

on

சர்வதேச அளவில் தங்கம் மற்றும் வெள்ளி விலை நிர்ணயம் செய்யப்படுவதற்கு ஏற்ப சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது என்பதை தினந்தோறும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று சென்னையில் தங்கம் விலை திடீரென உயர்ந்துள்ளது.

சென்னையில் நேற்று தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 4490.00 என விற்பனையாகி வந்த நிலையில் இன்று கிராமத்து 16 ரூபாய் உயர்ந்து ரூபாய் 4506.00 என விற்பனையாகி வருகிறது. அதேபோல் சென்னையில் நேற்று ஒரு சவரன் தங்கம் விலை ரூபாய் 35920.00 என விற்பனையாகி வந்த நிலையில் இன்று 128 ரூபாய் உயர்ந்தது ரூபாய் 36048.00 என விற்பனையாகி வருகிறது.

மேலும் சென்னையில் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூபாய் 4870.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 38960.00 எனவும் விற்பனையாகி வருகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூபாய் 16 சுத்த தங்கம் விலை கூடியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கம் போலவே சென்னையில் வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 72.30 எனவும் இது நேற்றைய விலை 70 காசுகள் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் சென்னையில் வெள்ளி ஒரு கிலோ ஒரு ரூபாய் 72300.00 என விற்பனையாகி வருகிறது.

தங்கம் விலை இன்னும் ஒரு சில நாட்களுக்கு ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்றும் ஆனால் நீண்ட கால முதலீட்டிற்கு தங்கம் தான் மிகச்சிறந்த முதலீடு என்றும் பொருளாதார நிபுணர்கள் மற்றும் தங்க நகை வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

Trending

Exit mobile version