தமிழ்நாடு

குறைந்தது தங்கம் விலை: சென்னையில் இன்றைய நிலவரம்!

Published

on

தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக குறைந்து கொண்டே வந்ததை அடுத்து பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து, தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம் என்று தங்கநகைகளை வாங்கினர்.

ஆனால் திடீரென கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏறிக்கொண்டே வருகிறது என்பதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்து தற்போது பார்ப்போம்.

நேற்று சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு நேற்று 4485.00 ரூபாய் என்ற விலையில் இருந்த நிலையில் இன்று சென்னையில் கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் குறைந்து ரூபாய் 4475.00 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது.

அதே போல் நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 35880.00 என்ற விலையில் விற்பனையாகி வந்த நிலையில் இன்று சவரன் ஒன்றிற்கு ரூபாய் 80 குறைந்து 35800.00 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் 24 கேரட் தங்கத்தின் விலை இன்று ஒரு கிராம் ரூபாய் 4834.00 என்றும் 8 கிராம் ரூபாய் 38672.00 என்றும் விற்பனையாகி வருகிறது. அதே போல் சென்னையில் வெள்ளியின் விலை இன்று ஒரு கிராம் 74.90 ரூபாய் என்றும் ஒரு கிலோ 74900.00 என்றும் விற்பனையாகிறது. நேற்றும் வெள்ளியின் விலை இதே விலை தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version