தமிழ்நாடு

இன்றும் குறைந்தது தங்கம் விலை: சென்னையின் விலை என்ன?

Published

on

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை இறங்கிக் கொண்டே இருக்கிறது என்பதையும் சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைவு காரணமாக சென்னையிலும் இந்தியாவில் அனைத்து பகுதியிலும் தங்கம் விலை இறங்கிக் கொண்டிருக்கிறது என்பதையும் பார்த்து வருகிறோம. தங்கம் விலை தொடர்ச்சியாக இறங்கி வருவதால் தங்கம் வாங்குபவர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர் என்பதும் ஆனால் அதே நேரத்தில் தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் அதிருப்தி அடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சென்னையில் இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து கிராம் ஒன்றின் விலை 4435 ரூபாய் என விற்பனையாகி வருகிறது. அதேபோல் சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.35,480 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு 73.30 ரூபாய் என்ற விலைக்கும் ஒரு கிலோ ரூ.73,300 என்ற விலையிலும் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் ஊரடங்கு தளர்வு காரணமாக தற்போது தங்க நகை கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து தங்கம் விலை குறைந்துள்ளதால் தங்கம் வாங்குவதற்கு பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் தங்க நகைக்கடைகளில் குவிந்து வருகின்றனர். குறிப்பாக சென்னையில் திநகரில் உள்ள தங்க நகை கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version