தமிழ்நாடு

இன்றும் ரூ.168 உயர்ந்த தங்கம் விலை: சென்னை நிலவரம் என்ன?

Published

on

தங்கம் விலை நேற்றுமுன் தினம் ஒரு சவரனுக்கு 144 ரூபாயும் நேற்று ஒரு சவரனுக்கு ரூபாய் 184ம் உயர்ந்துள்ளதுள்ளதை அடுத்து இன்றும் ஒரு சவரனுகு ரூ.168 உயர்ந்துள்ளதால் மூன்றே நாட்களில் சுமார் 500 ரூபாய் உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூபாய் 4541.00 என்று விற்பனை ஆகி இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 21 ரூபாய் உயர்ந்து ரூபாய் 4562.00 என விற்பனையாகி வருகிறது.

அதேபோல் சென்னையில் நேற்று ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 36328.00 என விற்பனையாகி வந்த நிலையில் இன்று ஒரே நாளில் ரூ.168 உயர்ந்து ரூபாய் 36496.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 4926.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 39408.00 எனவும் விற்பனையாகி வருகிறது. ஆபரண தங்கம் போலவே சுத்த தங்கமும் ஒரு கிராம் ரூபாய் 21ம், ஒரு சவரன் ரூபாய் 168ம்உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் தங்கத்தின் விலை போலவே வெள்ளியின் விலை இன்று உயர்ந்துள்ளது. நேற்று வெள்ளியின் விலை ரூ.73.00 என விற்பனையான நிலையில் இன்று கிராம் ஒன்றுக்கு 20 காசுகள் உயர்ந்து ரூபாய் 73.20 என விற்பனையாகியுள்ளது. இன்று வெள்ளி ஒரு கிலோ விலை ரூபாய் 73200.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version