தமிழ்நாடு
உச்சத்திற்கு சென்றது தங்கம் விலை: ஒரு கிராம் ரூ.28 உயர்வு!
தங்கம் விலை ஒரே நாளில் கிராமுக்கு ரூபாய் 28ம் சவரனுக்கு ரூ256ம் உயர்ந்துள்ளது தங்க நகை பிரியர்கள் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வரும் நிலையில் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ஒரு கிராமுக்கு ரூபாய் 28 உயர்ந்து உள்ளது. சென்னையில் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.4534.00 என நேற்று விற்பனையாகி வந்த நிலையில் இன்று ஒரு கிராம் ரூ.4566.00 என விற்பனையாகி வருகிறது
அதேபோல் சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.36528.00 என நேற்று விற்பனையாகி வந்த நிலையில் இன்று சவரன் ஒன்றுக்கு ரூ.36272.00 என விற்பனையாகி வருகிறது. நேற்றைய விலையில் இருந்து இன்றைய விலை ரூபாய் 256 உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது
அதேபோல் சென்னையில் 24 காரட் சுத்தத் தங்கம் ஒரு கிராம் விலை ரூ.4888.00 எனவும் ஒரு சவரன் விலை ரூ.4920.00 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.72.30 எனவும் கிலோ ஒன்றுக்கு ரூ.72,300 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.