தமிழ்நாடு

ஒரு கிராமுக்கு ரூ.20 உயர்ந்தது தங்கம்: சென்னையில் இன்றைய விலை என்ன?

Published

on

கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்து கொண்டே வந்தாலும் நேற்றும் இன்றும் தங்கம் விலை திடீரென உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த தகவலை தற்போது பார்ப்போம்

நேற்று சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.4445 என்ற விலையில் இருந்த நிலையில் இன்று சென்னையில் கிராம் ஒன்றுக்கு 20 ரூபாய் உயர்ந்து ரூபாய் 4465 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது. தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஒரு கிராமுக்கு ரூ.60க்கும் மேல் உயர்ந்துள்ளது. அதே போல் நேற்று சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 35560.00 என்ற விலையில் விற்பனையாகி வந்த நிலையில் இன்று சவரன் ஒன்றிற்கு ரூபாய் 160 உயர்ந்து 35720.00 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நேற்றைய விலையை விட இன்று சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் 24 கேரட் தங்கத்தின் விலை இன்று ஒரு கிராம் ரூபாய் 4824.00 என்றும் 8 கிராம் ரூபாய் 38592.00 என்றும் விற்பனையாகி வருகிறது. அதே போல் சென்னையில் வெள்ளியின் விலை இன்று ஒரு கிராம் 73.90 ரூபாய் என்றும் ஒரு கிலோ 73900.00 என்றும் விற்பனையாகிறது. நேற்று ஒரு கிராம் வெள்ளி 74.10 என்றும் ஒரு கிலோ 74100.00 என்றும் விற்பனையாகி வந்த நிலையில் இன்று வெள்ளியின் விலை சற்று இறங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Trending

Exit mobile version