தமிழ்நாடு

ஒரே நாளில் ரூ.488 குறைந்த தங்கம் விலை: பொதுமக்கள் இன்ப அதிர்ச்சி!

Published

on

தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களாக சரிந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 488 குறைந்துள்ளது பொதுமக்களுக்கு பெரும் இன்பஅதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்துள்ளதால் சென்னையிலும் இன்று விலை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய தங்கம் வெள்ளி விலை குறித்த விவரங்களை தற்போது பார்ப்போம்.

சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூபாய் 4501.00 என்று விற்பனை ஆகி இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 61 ரூபாய் குறைந்து ரூபாய் 4440.00 என விற்பனையாகி வருகிறது. அதேபோல் சென்னையில் நேற்று ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 36008.00 என விற்பனையாகி வந்த நிலையில் இன்று ஒரே நாளில் 488 ரூபாய் குறைந்து 35520.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 4804.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 38432.00 எனவும் விற்பனையாகி வருகிறது. ஆபரண தங்கம் போலவே சுத்த தங்கமும் ஒரு கிராம் ரூபாய் 61ம், ஒரு சவரன் ரூபாய் 488ம் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் தங்கத்தின் விலை போலவே வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. நேற்று வெள்ளியின் விலை ரூ.72.00 என விற்பனையான நிலையில் இன்று கிராம் ஒன்றுக்கு இரண்டு ரூபாய் குறைந்து ரூபாய் 70.00 என விற்பனையாகியுள்ளது. இன்று வெள்ளி ஒரு கிலோ விலை ரூபாய் 70000.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் ஒரு சில நாட்களுக்கு தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்றும் நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Trending

Exit mobile version