இந்தியா

உக்ரைன் போர் எதிரொலி: வரலாறு காணாத வகையில் கச்சா எண்ணெய், தங்கம் விலை உயர்வு!

Published

on

உக்ரைன் போர் காரணமாக வரலாறு காணாத வகையில் தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து உள்ளதை அடுத்து உலக நாடுகளில் பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். குறிப்பாக இந்தியாவில் மும்பை பங்கு சந்தை 2700 புள்ளிகளுக்கும் அதிகமாக இருந்து இறங்கி உள்ளது.

இந்த நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 1856 ரூபாய் அதிகரித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் 232 ரூபாய் அதிகரித்து 4951 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது என்பதும் ஒரு சவரன் தங்கம் ஒரே நாளில் 1856 ரூபாய் அதிகரித்து 39608 என விற்பனையாகி வருவதாகவும் நகைக்கடை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதேபோல் வெள்ளி விலை ஒரே நாளில் 4000 ரூபாய் ஒரு கிலோவுக்கு அதிகரித்து 72,700 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தங்கம் போலவே கச்சா எண்ணெய் விலையும் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெயின் விலை உக்ரைன் போர் காரணமாக ஒரு பீப்பாய் 105 டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதால் உயர்ந்துள்ளதாகவும் ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக உலகம் முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகமாக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version