தமிழ்நாடு

கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் குற்றவாளி: சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Published

on

தமிழகத்தையே உலுக்கிய கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்பட 11 பேர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது .

சேலம் மாவட்டம் ஓமலூர் என்ற பகுதியை சேர்ந்த கோகுல்ராஜ் என்ற கல்லூரி மாணவர் கடந்த 2015ஆம் ஆண்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் யுவராஜ் உள்பட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்து கடந்த ஏழு ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு சற்றுமுன் வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய யுவராஜ் உள்பட 11 பேர் குற்றவாளிகள் என மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் குற்றவாளிகளுக்கு தண்டனை விவரங்கள் வரும் 8ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார். இந்த தீர்ப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் நாமக்கல்லை சேர்ந்த மாணவி ஒருவரை காதலித்ததாகவும் இந்த காதலுக்கு எதிர்ப்பு எழுந்ததால் தான் அவர் கொலை செய்யப்பட்டதாகவும் அவரது பிணம் நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் கண்டெடுக்கப் பட்டதாகவும் சிபிசிஐடி போலீசார் கண்டுபிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த கொலை வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கபப்ட்ட யுவராஜ், தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் நிறுவனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Trending

Exit mobile version