உலகம்

இங்கிலாந்து சென்று படிக்க உள்ளீர்களா? உஷார்.. டிசம்பர் மாதம் முதல் விசா கட்டணம் உயர்வு!

Published

on

இங்கிலாந்து அரசு டிசம்பர் மாதம் முதல் குடிவரவு சுகாதாரக் கட்டணத்தினை உயர்த்தியுள்ளது. இதனால் வெளிநாட்டில் இருந்து இங்கிலாந்து செல்லும் மாணவர்கள், ஊழியர்கள், குடும்ப உறுப்பினர்கள் என அனைவருக்குமான விசா கட்டணமும் டிசம்பர் மாதம் முதல் உயர உள்ளது.

2015-ம் ஆண்டு ஏப்ரல் முதல் இந்தக் குடிவரவு சுகாதாரக் கட்டணம் இங்கிலாந்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்தக் கட்டணம் 200 பவுண்டில் இருந்து 400 பவுண்டுகளாக அதிகரிக்கும். மேலும் மாணவர்களுக்கு 50 பவுண்டு தள்ளுபடி உள்ளதால் 150 பவுண்டாக இருந்த கட்டணம் 300 பவுண்டாக அதிகரிக்க உள்ளது.

இந்தக் கட்டணம் மூலம் வசூலிக்கப்படும் தொகையினை இங்கிலாந்தின் தேசிய மருத்துவச் சேவைக்காகப் பயன்படுத்துவார்கள்.

மேலும் இந்தக் கட்டணத்தினைச் செலுத்தி வெளிநாட்டில் இருந்து இங்கிலாந்து செல்லும் அனைத்து மாணவர்கள், குடும்ப உறுப்பினர்கள், ஊழியர்கள் என அனைவருக்கும் இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர்கள் இணையாக 6 மாதத்திற்கான மருத்துவச் சேவைகள் வழங்கப்படும்.

இந்தக் கட்டண உயர்வால் இங்கிலாந்தில் நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்றும் இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version