விமர்சனம்

காதில் கொஞ்சம் பூவை சுற்றினாலும் முழுசா ரசிக்க வச்சுருக்காங்க… காட்ஸில்லா வெர்சஸ் காங் விமர்சனம்!

Published

on

லெஜண்ட்ரி நிறுவனம் மான்ஸ்டர்வெர்ஸ் என்ற பெயரில் படங்களைத் தயாரித்து வருகிறது. இதில் 2014 ஆம் ஆண்டு காட்ஸில்லா, 2017 ஆம் ஆண்டில் காங்: தி ஸ்கல் ஐலேண்ட், 2019 ஆம் ஆண்டில் வெளியான காட்ஸில்லா: கிங் ஆஃப் மான்ஸ்டர்ஸ் ஆகிய படங்களின் வரிசையில் தற்போது வெளியாகியிருக்கும் படம் தான் ‘காட்ஸில்லா வெர்சஸ் காங்’. சரி… சரி… இது சமீபத்தில் வெளியான திரைப்படம் இல்லைதான். கொஞ்சம் லேட் ஆயிடுச்சு அதான். இந்த லேட் ரிவியூ. இனி இப்படி லேட் ஆகாம பாத்துக்கிறோம்.

ஆடம் விங்கார்ட் இயக்கி உள்ள இந்தப் படம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஓடிடியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது ஒருவழியாக திரையரங்குகளுகளில் வெளியாகி ஹாலிவுட் ரசிகர்களுக்கும், 20கே கிட்ஸ்களும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த புதன் (24.03.2021) அன்று வெளியான இந்த ‘காட்ஸில்லா வெர்சஸ் காங்’ படம் இந்தியாவில் மிகப்பெரும் வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

மாஸ்டர் படத்தை அடுத்து தற்போது திரையரங்குகளுக்கு அதிக ரசிகர்களை ஈர்த்துள்ள படம் தான் இந்த காட்ஸில்லா வெர்சஸ் காங் திரைப்படம்.
உறங்கிக்கொண்டிருந்த காட்ஸில்லா திடீரென நகரத்துக்குள் நுழைந்து மக்களைத் தாக்கத் தொடங்குகிறது. மற்றொரு புறம் ஸ்கல் ஐலாண்டில் காங் சந்தோசமாக வாழ்ந்துகொண்டிருக்கிறது. (அப்படியும் சொல்லலாம்). காங் திடீரென மக்களை தாக்க காரணம் என்ன? எங்கையோ இருக்கும் காங் நகரத்திற்குள் வந்து காட்ஸில்லாவுடன் சண்டை போடுவது எதற்காக என்பதை பல ட்விஸ்ட் மற்றும் விபிஎக்ஸ் காட்சிகளுடன் சொல்லியிருக்கும் படம் தான் இந்த காட்ஸில்லா வெர்சஸ் காங்.

தமிழில் டபுள் ஹீரோ சப்செக்ட்டை மனசில் வைத்துக்கொள்ளுங்கள். ஒரு ஹீரோ நல்லவர் தான் ஆனால், ஊர் மக்களுக்கு சின்ன சின்ன தொல்லை கொடுத்துக்கொண்டிருப்பார். மற்றொரு ஹீரோ ரொம்ப நல்லவராக மக்களுக்கு நல்லது செய்வது மட்டுமே தன்னுடைய கடமை என்று இருப்பார். ஒரு கட்டத்தில் அந்த கெட்ட ஹீரோ நல்ல ஹீரோவா மாறுவார். அல்லது அந்த கெட்ட ஹீரோ ஏன் இப்படி கெட்டவராக இருக்கிறார் என்று சொல்லி அதை நம்மை ஏற்றுக்கொள்ளச் செய்வார்கள். அதே தான் இதில். இங்கு கெட்ட என்ற இடத்தில் காட்ஸில்லாவையும், நல்ல என்ற இடத்தில் காங்கையும் போட்டுக்கொண்டால் படம் முடிஞ்சு.

படத்தின் உண்மையான ஹீரோ விஎப்எக்ஸ் தான். ஒரு டைட்டனின் (மிகப்பெரிய உயிரினம்) உடல் அசைவுகள் எப்படியிருக்கும். அதை நடக்கும் போது, குளிக்கும்போது, பீலிங்க்ஸை வெளிக்காட்டும்போது அதன் உடல் எப்படியிருக்கும் என்று ஒவ்வொரு அங்குலமாக செதுக்கியிருக்கிறார்கள். மற்றொரு ஹீரோ சண்டைக் காட்சி. இடைவேளைக்கு முன் காங் மற்றும் காட்ஸில்லா சண்டையிடும் காட்சி ஒரு அரைமணி நேரம் வரும். தியேட்டரில் விசிலும் ஆரவாரமும் பறந்தது. அந்த அளவு அட்டகாசமான சண்டைக்காட்சி. அதே நேரத்தில் இறுதியில் வரும் சண்டையும் அட்டகாசத்தின் உச்சம்.

படத்தின் மற்றொரு ஹீரோ அல்லது ஹீரோயின் காங் பிரண்டாக நடித்திருக்கும் அந்தச் சின்னப் பொண்ணு. அவ்ளோ க்யூட்டாக எக்ஸ்பிரசன்ஸ் காட்டி அசத்தியிருக்கிறார். படத்தில் செண்டிமெண்ட் காட்சி ஒர்க்கவுட் ஆனதற்கு அந்தக் குழந்தையின் நடிப்பும் ஒரு காரணம். 2 மணி நேரம் ஓடும் படம் நம்மை முழுவதுமாக திருப்தி படுத்துகிறது. வெளியாகி ரெண்டு வாரம் ஆயிடுச்சு ஆனாலும், பிரச்னை இல்லை, போய்ப்பார்க்கலாம்.

காங் உலகம், அங்கு ஒரு சக்தி, காட்ஸில்லா வாயாலேயே ஹாங்காங்கில் இருப்பவர்களை தோண்டி எடுப்பது, பூமிக்குள்ள ஏழு கடல் ஏழு மலை தாண்டி ஒரு சக்தி இருக்கு. அது உலகத்தை அளிக்கும் சக்தின்னு பழைய பூவை காதில் சுத்துவது என்று பல விஷயங்கள் படத்தில் இருந்தாலும் அட்டகாசமான கமர்சியல் எலமெண்ட்ஸ் மூலம் நம்மை எல்லாவற்றையும் மறக்க வைத்து அதகளம் பண்ணியிருக்கிறார்கள் காட்ஸில்லா வெர்சஸ் காங் டீம்… செம்ம நச் கமர்சியல் படம்… நிச்சயம் தியேட்டரில் பாருங்கள்… முடிந்தால் ஐமேக்ஸில் பார்க்கலாம்…

seithichurul

Trending

Exit mobile version