சினிமா

தியேட்டர், ஓடிடி இரண்டிலும் ஒரே நேரத்தில் ரிலீஸாகும் காட்ஸில்லா vs கிங்காங்!

Published

on

கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பின்னர் ஒரு சில திரைப்படங்கள் தியேட்டரிலும் பல திரைப்படங்கள் ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள காட்ஸில்லா vs கிங்காங் என்ற திரைப்படம் ஒரே நாளில் திரையரங்குகள் மற்றும் ஓடிடியில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காட்ஸில்லா vs கிங்காங் என்ற திரைப்படம் வரும் மார்ச் 31-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்தியாவிலும் தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து பிராந்திய மொழிகளிலும் வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடும் அதே நாளில் இந்தத் திரைப்படம் HBO ஓடிடியிலும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் உள்பட இந்திய திரைப்படங்கள் ஒரே நாளில் தியேட்டர் மற்றும் ஓடிடியில் வெளியாவதற்கு மிகப் பெரிய எதிர்ப்புகள் இருந்தாலும் ஹாலிவுட் படங்களுக்கு இந்த பிரச்சனை இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுமார் 150 முதல் 200 மில்லியன் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 1000 மில்லியன் வரை வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இதற்கு முன் அந்த காட்ஜில்லா திரைப்படங்கள் அனைத்துமே ஆயிரம் கோடி வசூலை அடைந்துள்ளன என்பது தெரிந்ததே.

seithichurul

Trending

Exit mobile version