உலகம்

GoDaddy நிறுவனத்திலும் வேலை நீக்கம்.. இதற்கு ஒரு முடிவே இல்லையா?

Published

on

தினந்தோறும் ஏதாவது ஒரு சில நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கையை எடுப்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக இன்று காலை வெளியான செய்தியின்படி அமெரிக்க ஹெல்த் கேர் நிறுவனம் தனது 8 சதவீத ஊழியர்களை வேலை நீக்கம் செய்வதாக அறிவித்தது.

தினந்தோறும் வேலை நீக்க நடவடிக்கை குறித்த செய்தி வெளியாகி வருவது தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காலை விடிந்தால் நாம் வேலையில் இருக்கின்றோமா? இல்லையா? என்ற அச்சத்துடனே ஒவ்வொரு நாளும் விடிந்து கொண்டிருப்பதாக ஊழியர்கள் தெரிவித்து வருகின்றனர்.

#image_title

அந்த வகையில் உலகளாவிய ஹோஸ்டிங் தளமான GoDaddy நிறுவனமும் தனது பங்கிற்கு எட்டு சதவீத பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இது குறித்து ஊழியர்களுக்கு GoDaddy தலைமை நிர்வாக அதிகாரி மின்னஞ்சல் அனுப்பி இருப்பதாகவும் எந்தெந்த பிரிவில் எவ்வளவு ஊழியர்கள் வேலைநீக்கம் செய்யப்படுவார்கள் என்பது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

GoDaddy நிறுவனத்தில் மூன்று வகையான துறைகள் இருப்பதாகவும் மீடியா டெம்பிள், மெயின் ஸ்ட்ரீட் ஹாப் மற்றும் 123 ரேக் ஆகியவற்றில் 123 ரேக் என்ற துறையில் உள்ள ஊழியர்கள் எதிர்காலத்தில் தேவைப்பட வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.

உலகளாவிய வலை ஹோஸ்டிங் தளமான GoDaddy நிறுவனம் 8 சதவீத ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது என்றும் இந்த நடவடிக்கை இன்றி அமையாது என்றும் GoDaddy சி.இ.ஓ தெரிவித்துள்ளார். மார்ச் ஒன்றாம் தேதிக்குள் எந்தெந்த துறையில் யார் யார் வேலை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று அறிவிப்பை வெளியிடுவோம் என்றும் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு மாற்றுத் தொகுப்பையும் வழங்க திட்டமிட்டு உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளது. அந்தந்த நாட்டில் உள்ள ஊழியர்களுக்கு அந்தந்த நாட்டின் சட்டப்படி நிவாரணம் வழங்கப்படும் என்றும் GoDaddy சிஇஓ தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு பிறந்து முழுமையாக ஒன்றரை மாதம் கூட முடிவடையாத நிலையில் 336-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்களில் இருந்து ஒரு லட்சத்துக்கும் அதிகமான பணியாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version