இந்தியா

சிறுமியை பின் தொடர்ந்து பள்ளிக்கு செல்லும் செல்ல ஆடு… வைரல் வீடியோ…

Published

on

சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது சில வீடியோக்கள் வெளியாகி வைரலாவது தொடர்ந்து வருகிறது. சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும். சில வீடியோக்கள் அதிர்ச்சியை கொடுக்கும். சில வீடியோக்கள் கண்ணீரை வரவழைக்கும். சில வீடியோக்கள் ஆச்சர்யத்தை தரும். அந்த வகையில் தற்போது ஆச்சர்யம் தரும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மனிதர்களுக்கு நாய், பூனை மட்டும் செல்லப்பிராணி இல்லை. பாசமாக வளர்த்தால் ஆடு, மாடு உள்ளிட்ட பல உயிரினங்களும் மனிதர்களுடன் அன்பாக பழகும் குணம் கொண்டது. அவ்வளவு ஏன், புலி, சிங்கம், சிறுத்தை போன்ற விலங்குகளுடனே மனிதர்கள் அன்பாக பழகும் வீடியோக்கள் ஏராளமான யுடியூப்பில் கொட்டிக்கிடக்கிறது.

இந்நிலையில், ஹிமாச்சல் பிரதேசத்தில் ஒரு சிறுமி தனது வீட்டில் ஒரு ஆட்டுக்குட்டியை வளர்த்து வருகிறார். அந்த ஆடு சிறுமி எங்கே சென்றாலும் அவரை பின் தொடர்ந்து செல்லுமாம். அந்த சிறுமி பள்ளிக்கு போகும் போதும் அந்த ஆடு சிறுமியின் பின்னாலேயே செல்கிறது.

இந்த வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

 

seithichurul

Trending

Exit mobile version