வைரல் செய்திகள்

ஏரியாவையே மிரட்டிய ‘ஆடு’ குடும்பம்… சிரித்துக் குழுங்க வைக்கும் வைரல் வீடியோ!

Published

on

துருக்கியில் ஆடு குடும்பம் ஒன்று ஒரு தெருவையே மிரட்டி விரட்டிய வீடியோ காட்சி ஒன்று வைரலாகி உள்ளது.

துருக்கியில் உள்ள ஒரு தெருவில் கட்டடம் ஒன்றின் முன் ஒரு ஆடு குடும்பம் மக்களை விரட்டியுள்ளது. ஒரு செம்மறி ஆடு, வெள்ளாடு, 3 குட்டி ஆடுகள் இணைந்து அந்த கட்டடத்தின் முன் மக்களுக்கு வழிவிடாமல் ஒரே ரகளை செய்துவிட்டன.

இந்த காட்சியை வீடியோவாக சுற்றியுள்ள மக்கள் பதிவு செய்துள்ளனர். அந்த வீடியோவை அப்பகுதி நகராட்சி நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது. இந்த வீடியோ ட்விட்டரில் 2.6 மில்லியன் பார்வைகளைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. பலரும் இந்த வீடியோ குலுங்கி குலுங்கி சிரிக்க வைப்பதாகப் பதிவிட்டு வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version