சினிமா

GOAT பட்ஜெட் ரூ.400 கோடி, விஜய்க்கு சம்பளம் ரூ.200 கோடி – தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி விளக்கம்!

Published

on

சென்னை: விஜய்யின் 68-வது படமான ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (GOAT) படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய்யுடன் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படம், செப்டம்பர் 5-ம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று வெளியாகவுள்ளது.

இப்படம் விஜய் அரசியலுக்கு வந்தபிறகு வெளியாகும் முதல் படமாகும் என்பதால், விஜய் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு நேரங்களில் இணையத்தில் வைரலாகி, படத்தின் மீதான ஆவலை அதிகரித்துள்ளன.

இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சமீபத்திய நேர்காணலில், #GOAT படத்தின் பட்ஜெட் மற்றும் விஜய்யின் சம்பளம் குறித்து விளக்கமளித்தார். “பிகில் திரைப்படம் ரூ.180 கோடி பட்ஜெட்டில் உருவானது. ஆனால் இப்பொழுது, விஜய்யின் மார்க்கெட் மிகுந்து வளர்ந்துள்ளது. ‘கோட்’ திரைப்படம் சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் பாதி தொகை விஜய்யின் சம்பளமாகும். ‘கோட்’ மிகப்பெரிய படம், மேலும் டிஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதால் பட்ஜெட் அதிகரிக்கப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

இந்த விளக்கத்தால் படத்தின் மேல் மேலும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

 

Poovizhi

Trending

Exit mobile version