தமிழ்நாடு

மீண்டும் மோடிக்கு எதிர்ப்பு: ட்ரெண்டிங்கில் கோ பேக் மோடி!

Published

on

பிரதமர் மோடி இன்று மக்களவை தேர்தல் பிரச்சாரத்துக்காக தமிழகம் வருகிறார். மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்களுடன் சந்திப்பு நடத்துகிறார் மோடி. இதனையொட்டி தேமுதிகவை கூட்டணியில் சேர்க்க பெரும் முயற்சி நடந்து வருகிறது.

பொதுவாக பிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம் அவருக்கு இங்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பும். வைகோ உள்ளிட்டோர் அவருக்கு கருப்புக்கொடி காட்டி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்வர். மேலும் சமூக வலைதளங்களில் கோபேக்மோடி என்ற ஹேஷ் டேக்கை ட்ரெண்ட் செய்ய வைத்து நெட்டிசன்களும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவர்.

ஒவ்வொரு முறை மோடி தமிழகம் வரும்போதும் கோபேக்மோடி உலக அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடிக்கும். இதற்கு போட்டியாக பாஜக மற்றும் மோடி ஆதரவாளர்கள் மோடி வெல்கம் என்ற ஹேஷ் டேக்கை ட்ரெண்ட் செய்வது வழக்கமாக நடைபெறும். இந்நிலையில் இன்று தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

வழக்கமாக கோபேக்மோடி, கோபேக்சாடிஸ்ட்மோடி என்ற இரண்டையும் ட்ரெண்ட் செய்வார்கள். ஆனால் கோபேக்மோடி தான் அதில் முதலிடம் பிடிக்கும். இந்தமுறை கோபேக்சாடிஸ்ட்மோடி எனற ஹேஷ்டேக் முதலிடத்தையும், கோபேக்மோடி இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது.

Trending

Exit mobile version