தமிழ்நாடு

பால் கொள்முதல் விலை உயர்வு, பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் விலை குறைவு: அரசாணை

Published

on

தமிழக முதல்வராக நேற்று முக ஸ்டாலின் அவர்கள் பதவியேற்றதும் ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் அந்தக் கோப்புகளில் ஒன்று பால் விலை குறைப்பு பால் விலை லிட்டருக்கு 3 குறைக்கப்படும் என அதிரடியாக நேற்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்ததை அடுத்து பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இது குறித்த அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்களுக்கு பால் விலை குறைப்பு மற்றும் என்றும் பால் கொள்முதல் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. பால் கொள்முதல் விலை ரூபாய் நான்கு உயர்த்தியும் பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் விலையில் லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் மூன்று குறைத்தும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

இந்த அரசாணையில் ஒரு லிட்டர் பசும் பாலின் தற்போதைய கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 4 ரூபாய் உயர்த்தி 28 லிருந்து 32 ஆக விலை நிர்ணயம் செய்யப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் ஒரு லிட்டர் எருமைப்பால் தற்போதைய கொள்முதல் விலை லிட்டருக்கு ரூபாய் 6 உயர்த்தப்பட்டு ரூபாய் 35 லிருந்து ரூபாய் 41ஆக விலை நிர்ணயம் செய்யப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது

மேலும் அனைத்து பால் வகைகளுக்கான விற்பனை விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் ஆறு மட்டும் உயர்த்தி விலை நிர்ணயம் செய்யப்படுகிறது என அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொது மக்களின் நலன் கருதி பால் விற்பனை விலையை அரசு நன்கு பரிசீலனை செய்து அனைத்து பால் வகைகளுக்கான விற்பனை விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் ஐந்திலிருந்து மூன்றாக குறைத்து விலை நிர்ணயம் செய்யப்படுகிறது என அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version