தமிழ்நாடு

உலக முதலீட்டாளர்கள் மாநாடு.. சிறப்பு.. முதல்நாள் செய்யப்பட்ட முதலீடு எவ்வளவு?

Published

on

சென்னை: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் நேற்று சுமார் 90,000 கோடி ரூபாய் வரை நேற்று முதலீடு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வருகிறது.

சென்னை நந்தம்பாக்கத்தில் தற்போது உலக முதலீட்டார்கள் மாநாடு நடந்து வருகிறது. தமிழக அரசு சார்பாக இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்று தொடங்கிய மாநாடு இன்று மாலை வரை நடக்கிறது. சுமார் 2.55 லட்சம் கோடி ரூபாய்க்கு இந்த மாநாடு மூலம் முதலீடு பெறப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அதானி குழுமம் 12,000 கோடி ரூபாய், சியெட் டயர்ஸ் 4,000 கோடி ரூபாய், இந்தியன் ஆயில் நிறுவனம் 16,641 கோடி ரூபாய், ஃபோர்டு நிறுவனம் 1,300 கோடி ரூபாய், ஹூண்ட்டாய் கார் நிறுவனம் 7,000 கோடி ரூபாய் என்று முதல் நாளில் 90 ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடுகள் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.பல சிறிய நிறுவனங்களும் இதில் முதலீடு செய்துள்ளது.

Trending

Exit mobile version