வணிகம்

இந்தியாவில் ரயில் சேவை வழங்க போட்டி போடும் சர்வதேச தனியார் நிறுவனங்கள்!

Published

on

மத்திய அரசு முதன் முறையாக தனியார் பயணிகள் ரயில் சேவையை அனுமத்திக்க முடிவு செய்துள்ளது. இந்நிலையில் அதற்கு விருப்பம் தெரிவித்து 2 டசனுக்கும் அதிகமான சர்வதேச மற்றும் உள்நாட்டு தனியார் நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன.

இந்தியாவில் மெட்ரோ ரயில் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வரும் ஜெர்மெனி நிறுவனமான ஆல்ஸ்டாம், பொம்பார்டியர், சீமன்ஸ் ஏஜி மற்ரும் மெக்யரி உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள் இந்தியாவில் தனியார் ரயில் சேவை வழங்க விருப்பம் தெரிவித்துள்ளன.

சர்வதேச நிறுவனங்கள் மட்டுமல்லாமல் இந்தியாவின் அதானி போர்ட்ஸ், ஐஆர்சிடிசி, என்ஐஐஎஃப், கேஈசி இண்டனேஷ்னல் உள்ளிட்ட நிறுவனங்களும் அரசின் தனியார் ரயில் சேவை முடிவுக்கு விருப்பம் தெரிவித்துள்ளன. முதற்கட்டமாக மத்திய அரசு 100 வழித்தடங்களில் தனியார் பயணிகள் ரயில் சேவையை வழங்கும்.

இந்த தனியார் ரயில்கள் குறித்து அறிவிப்புகள் 2020 – 2021 பட்ஜெட் கூட்டத்தொடரில் முக்கிய அறிவிப்பாக இருக்கவும் அதிக வாய்ப்புகள் உள்ளன.

seithichurul

Trending

Exit mobile version