இந்தியா

ஒட்டுமொத்த இஞ்ஜினியரிங் டீம் காலி.. வேலைநீக்கம் செய்த பிரபல நிறுவனம்..!

Published

on

இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்று ஒட்டுமொத்த இன்ஜினியரிங் டீமை காலி செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில மாதங்களாக முன்னணி நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் ஓபன் சோர்ஸ் டெவலப்பர் நிறுவனமான கிட் ஹப் என்ற நிறுவனம் தனது இன்ஜினியரிங் டீமை முழுமையாக பணி நீக்கம் செய்துள்ளது.

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அவுட்சோர்ஸிங் டெவெலப்பர் நிறுவனமான இந்த நிறுவனம் மறு சீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக 100 ஊழியர்களை வேலை நீக்கம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த 100 ஊழியர்களும் இன்ஜினியரிங் பிரிவில் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து கிட் ஹப் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறிய போது ’உலகளாவிய தொழில்நுட்ப பணி நீக்கங்களை கவனித்து வரும் நிலையில் இந்தியாவில் எங்கள் நிறுவனமும் 100 பொறியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இந்த எண்ணிக்கையை எங்களை பொருத்தவரை குறைவானது தான் என்றாலும் மன கஷ்டத்துடன் தான் இந்த முடிவை எடுத்திருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

layoff

இந்த நிலையில் கிட் ஹப் செய்தி தொடர்பாளர் செய்தியாளர்களிடம் கூறிய போது ’பணி குறைப்பு நடவடிக்கை என்பது தவிர்க்க முடியாதது என்றும் எங்கள் வணிகத்தின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்காக இந்த கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம் என்றும் இது மறு சீரமைப்பின் ஒரு பகுதி என்றும் தெரிவித்தார்.

மேலும் நீண்ட காலத்தை நோக்கி நிறுவனம் முன்னோக்கி நகர்த்துவதில் நாங்கள் சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்றும் அதில் ஒன்றுதான் வேலை நீக்க நடவடிக்கை என்றும் தெரிவித்தார். மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு ஓபன் சோர்ஸ் டெவலப்பர் நிறுவனமாக செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் வேலை நீக்கம் செய்துள்ளது 10 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிறுவனத்தில் 3000 பணியாளர்கள் வேலையை செய்து வரும் நிலையில் தற்போது 100 ஊழியர்களுக்கு வேலைநீக்கம் செய்யப்படுவதாக இமெயில் அனுப்பி உள்ளது. நாளைய டெவலப்பர் தேவையை நாங்கள் சீரமைக்க வேண்டிய நிலையில் இருப்பதாகவும் நிறுவனம் வளரவும் செழிக்கவும் இந்த நடவடிக்கை தேவையான ஒன்று என்றும் இந்நிறுவனத்தின் சிஇஓ அனைத்து வேலை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version