செய்திகள்

அய்ய்ய்! நான் பீச்ச பாத்துட்டேன்!…ஒரு மாற்றுத்திறனாளியின் மகிழ்ச்சி.. வைரல் வீடியோ..

Published

on

சென்னையில் உள்ள மெரினா கடற்கரை உலகின் 2வது பெரிய கடற்கரையாக திகழ்கிறது. நகர வாழ்க்கையிலிருந்து விடுபட்டு கொஞ்சம் மனதை ரிலாக்ஸ் ஆக்க மாலை மற்றும் இரவு நேரங்களில் நேரங்களில் பொதுமக்கள் அங்கே வந்து செல்கிறார்கள். அதோடு, அங்கு அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்கள் இருப்பதால் மெரினா கடற்கரை சென்னையில் உள்ள ஒரு முக்கிய சுற்றுல தளமாக இருக்கிறது.

அதேநேரம் மணலில் நடந்து சென்றுதான் கடலுக்கு அருகே செல்ல முடியும் என்பதால் மாற்று திறனாளிகள் அங்கு செல்ல முடியாத நிலை இருந்தது. தற்போது திமுக ஆட்சி நடைபெறும் நிலையில், சில நாட்களுக்கு முன்பு மாற்றுத்திறனாளிகளும் கடலை ரசிக்கும் வண்ணம், அவர்களுக்கு என தனிப்பதை அமைக்கப்பட்டது. எனவே, மாற்றுத்திறனாளிகள் பலரும் சக்கர நாற்காலிகள் வந்து கடலை முதன் முதலாக அருகில் ரசித்து பார்த்து மகிழ்ச்சியடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், ஒரு மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் முதன் முதலாக கடலின் அருகே சென்று கால் நினைக்கும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ‘அய்ய்ய்,. நான் பீச்ச பாத்துட்டேன்’ என மகிழ்ச்சி பொங்க கத்தும் அந்த வீடியோ பலரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version