உலகம்
கீழே விழுந்தாலும் விஸ்வரூப வெற்றி.. ஸ்கேட்டிங்கில் அசத்திய சிறுமி..(வீடியோ)..
![skating - Bhoomitoday skating](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/08/skating.jpg)
விளையாட்டு போட்டி என்றாலே நாம் வெற்றிபெற வேண்டும் என்கிற எண்ணம் அனைத்து போட்டியாளர்களுக்கும் இருக்கும். அதிலும் குழந்தைகள் என்றால் அந்த எண்ணம் மிகவும் அதிகமாக இருக்கும். தோல்வியை சந்தித்தால் பொதுவாக குழந்தைகள் அழும் பழக்கமுடையது. ஆனால், கீழே விழுந்த பின்பும் எழுந்து மீண்டும் வெற்றியை பெற்ற ஒரு சிறுமியின் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் ஹட்சன் பகுதியில் சமீபத்தில் குழந்தைகளுக்கான ஸ்கேட்டிங் போட்டி ஒன்று நடைபெற்றது. அதில் 6 சிறுமிகள் கலந்து கொண்டனர். இதில், போட்டி துவங்கிய சில வினாடிகளிலேயே 4 வயது சிறுமி கீழே விழுந்துவிட்டாள். ஆனாலும், மனம் தளராமல் எழுந்து மீண்டும் ஸ்கேட்டிங் செய்து முதல் நபராக வந்து வெற்றி பெற்று அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.
இந்த வீடியோவை நெட்டிசன்கள் பகிர்ந்து ‘கீழே விழுந்தாலும் மனம் தளராமல் முயற்சி செய்தால் வெற்றி நீச்சயம் என்பதற்கு இந்த சிறுமியே உதாரணம்’ என பதிவிட்டு வருகின்றனர்.
View this post on Instagram